tamilnadu

img

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது மோசடி சொந்த மாநில மக்களையே அந்நியர் ஆக்குவது பயங்கரவாதம்!

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது மோசடி சொந்த மாநில மக்களையே  அந்நியர் ஆக்குவது பயங்கரவாதம்!

பாட்னா, ஆக. 27 - வாக்காளர் பட்டியல் தீவிர  சிறப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்தும், தேர்தல் ஆணை யத்தின் மூலம் பாஜக மேற் கொள்ளும் வாக்குத் திருட்டுக்கு எதிராகவும், இந்தியா கூட்டணி கட்சி களின் சார்பில் மக்களவை எதிா்க் கட்சித் தலைவா் ராகுல் காந்தி பீகா ரில் ஆகஸ்ட் 17 அன்று பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினாா்.  வாக்காளர் உரிமைப் பயணம் என்ற இந்த பிரச்சார இயக்கம் செப்ட ம்பா் 1 அன்று, பாட்னாவின் காந்தி மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது. பீகாரின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 16 நாள்கள் 1,300  கி.மீ. தொலைவுக்கு திட்டமிடப் பட்ட இந்த பிரச்சார இயக்கம் நடை பயணமாகவும், வாகனப் பயண மாகவும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்குத் திருட்டு க்கு எதிரான இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகை யில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து புதன்கிழமை (ஆக.27) அன்று தனி விமானத்தில் பீகார் சென்றார். தூத்து க்குடி தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியும் அவ ருடன் சென்றார். அங்கு பிரச்சாரப் பயணத்தில் ராகுல் காந்தி, தேஜஸ்வி உள்ளிட்ட தலைவர்களுடன் ஒன்றாக வாக னத்தில் பயணித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  பொதுக்கூட்டத்தி லும் பங்கேற்றுப் பேசினார்.  அப்போது, “65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படு கொலை. சொந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களை வாக்கா ளர் பட்டியலிலிருந்து நீக்குவதை விட பயங்கரவாதம் இருக்க முடி யுமா?” என்று கேள்வி எழுப்பினார். “ராகுல் காந்தியின் வார்த்தை களிலும் கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது. அவர் வெறுமனே அரசியலுக்காக மேடைகளுக்காக பேசுபவர் கிடையாது. தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த கவனத்துடன் பேசுபவர்” என்று ராகுல் காந்தியைப்பாராட்டினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான அடித்த ளத்தை பாட்னாவில் தான் விதைத்த தாகவும், 400 இடம் என்று கனவு கண்டவர்களை 240-இல் அடக்கி யது இந்தியா கூட்டணி என்றும் குறிப் பிட்ட முதலமைச்சர், “அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்க ளே, நீங்கள் இன்றைக்கு இந்தியா விற்கான வழக்கறிஞராக இருக்கிறீர்கள். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும், இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும்” என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு நடைபெறும் வெற்றிவிழா கூட்டத்திலும் நிச்சயமாக பங்கேற்பேன் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாலை 4.30 மணிக்கு சென்னை திரும்பினார்.