tamilnadu

img

தியாகி பூந்தாழங்குடி பக்கிரி 58 ஆவது நினைவு தினம்

தியாகி பூந்தாழங்குடி பக்கிரி   58 ஆவது நினைவு தினம் 

மன்னார்குடி, அக். 7-  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம், பூந்தாழங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றியக் குழுவின் சார்பில், தியாகி பூந்தாழங்குடி பக்கிரியின் 58 ஆவது நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு, ஒன்றியக் குழு உறுப்பினர் சத்தியசீலன் தலைமை ஏற்றார்.  மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி. ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால், மூத்த தோழர்கள் மன்னன், மணி, லட்சுமணன், இந்திய மாணவர் சங்கத்தின் ஆனந்த் ஆகியோர் பேசினர்.  தியாகி பூந்தாழங்குடி பக்கிரியின் வரலாற்றுப் பதிவுகள் மற்றும் நினைவலைகளை மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி நாகராஜன் விளக்கி சிறப்புரையாற்றினார். பூந்தாழங்குடி கிராம மக்கள் பெருந்திரளாக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.    முன்னதாக, பூந்தாழங்குடி தியாகி பக்கிரி நினைவகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை, கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் ஏற்றி வைத்தார்.