tamilnadu

img

நிரப்பப்படாத 58 ஆயிரம் பணியிடங்கள்: ஜன.5 மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை, டிச.6 - மின்வாரியத்தில் காலி யாக உள்ள 58ஆயிரம் பணியிடங்களை நிரப்பக் கோரி ஜன.5 அன்று வேலை  நிறுத்தம் நடைபெறும் என்று தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் அறிவித்தார். மின் வாரிய ஊழியர்க ளுக்கு 1.12.2019 முதல் புதிய ஊதிய விகிதத்தை அமல்படுத்தி இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் கடந்தும் இதற்கான பேச்சு வார்த்தையை நிர்வாகம் தொடங்காமல் உள்ளது. எனவே, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். 58 ஆயிரத்திற் கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிரந்தர தன்மை வாய்ந்த பணி களில் அயல்பணி (அவுட் சோர்சிங்) முறையை கைவிட வேண்டும், வாரிய சுற்றறிக்கை பிபி-2ஐ ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மின்வாரியத்தில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு ஒரேமாதிரி பணப்பலன் களை வழங்க வேண்டும், கேங்மேன்களுக்கு சொந்த மாவட்டங்களில் பணியாற்ற ஏதுவாக பணிமாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திங்க ளன்று (டிச.5)  மேற் பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இதன் ஒருபகுதியாக மத்திய சென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன்,“ ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 3 மாதங்களுக்கு முன்பாக தொழிற்சங்கங்களிடம் கோரிக்கையை பெற்ற அமைச்சர், அதன்பிறகு பேசவில்லை”என்றார். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை யில்லாமல் உள்ள நிலையில் 58 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப மறுக்கின்றனர். இதன் காரணமாக தினம்தினம் களப்பணியாளர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளது. பணிக்கு ஆள்  எடுக்கும் போது 5ஆயிரம்  கேங்மேன்கள் விடுபட் டுள்ளனர். அவர்களை பணிக்கு எடுக்க வேண்டும்  என்றும் அவர் வலியுறுத்தி னார்.

டிச.22 தர்ணா

ஒப்பந்த தொழிலாளர் களை 380 ரூபாய் கூலி  அடிப்படையில் தினக்கூலி களாக எடுத்துக் கொள்ள  வேண்டும். தொழிற்சங் கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக அரசும், நிர்வாக மும் அழைத்து பேசி தீர்வு காண வலியுறுத்தி டிச.22 அன்று 13 மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா வும் இதன் தொடர்ச்சியாக ஜன.5 அன்று வேலை நிறுத் தம் நடைபெறும் என்றும் ராஜேந்திரன் தெரிவித்தார். தென் சென்னையிலுள்ள கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கிளைத் தலைவர்  விஜயபாஸ்கர் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ெஜய் சங்கர், தெற்கு மண்டலச்  செயலாளர் ஏ.முருகானந் தம், கிளைச் செயலாளர் பண்டாரம் பிள்ளை, பொரு ளாளர் குமார் உள்ளிட்டோர் பேசினர்.
 

;