tamilnadu

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை! தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

கடனை வலுக்கட்டாயமாக  வசூலித்தால் 5 ஆண்டு சிறை! தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்! 

சென்னை, ஜூன் 13 - கடனை வலுக்கட்டாயமாக வசூலித் தால் 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல, தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர் களை விசாரணையின்றி தடுப்பு காவ லில் வைப்பதற்கான சட்ட மசோதா வுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் கடன் வழங்கும் சில நிறுவனங்கள், கடனை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.  இந்நிலையில், தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக் கட்டாயமாக பணம் வசூலிப்பதை தடுக்க வகைசெய்யும் புதிய சட்ட திருத்த மசோதாவை துணை முத லமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப் பேரவையில் ஏப்ரல் 26 அன்று தாக்கல் செய்தார். சட்டத்திருத்த மசோதாவை வாசித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘’கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரையோ அல்லது அவ ரது குடும்பத்தினரையோ வலுக் கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்த வோ, மிரட்டவோ, பின்தொடரவோ, அவர்களது சொத்துக்களைப் பறிக்க வோ கூடாது. மீறுபவர்கள் மீது 5  ஆண்டு சிறைத் தண்டனை, 5 லட்சம்  ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வலுக் கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால், பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்’’ என்றார்.