tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

சிபிஎம் உறுப்பினர் ரசீது வழங்கல்

கும்பகோணம், அக்.15 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர்  மாவட்டம் கும்பகோணம்  ஒன்றிய உறுப்பினர் களுக்கு ரசீது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கும்பகோணம் ஒன்றியச்  செயலாளர் கணேசன்  தலைமை வகித்தார். உறுப் பினர் ரசீதை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் வழங்கி சிறப்பு ரையாற்றினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  

அடிக்கல் நாட்டு விழா  

தஞ்சாவூர், அக்.15 - தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி அருகே  காலகம் ஊராட்சி, அருள் மிகு தில்லைக்காளியம் மன், அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோவில்  விழா மேடை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு  விழா, பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை யில் நடைபெற்றது. முன் னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார், திமுக நிர்வாகி குட்டியப்பன் மற்றும் கிராமத்தினர் பலர் கலந்து கொண்டனர்.  

கூட்டுறவு சங்க பேரவை

பாபநாசம், அக்.15 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ரெகுநாதபுரத்தில் உள்ள சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்  பேரவைக் கூட்டம் நடந் தது.  சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கூட்டு றவு சார் பதிவாளர் சின்னப் பொண்ணு தலைமை வகித்தார். கூட்டுறவு துணைப் பதிவாளர், பொது  விநியோகத் திட்டம், தஞ்சா வூர் சுவாமி நாதன் முன்னிலை வகித்தார். இதில் 14 சதவீத பங்குத்  தொகையான ரூ.6,17,359-ஐ  1018 பேருக்கு துணைப் பதிவாளர் பிரியதர்ஷினி வழங்கினார். சங்கத்தின் செயலர் கலியமூர்த்தி பேசி னார். கள மேலாளர் இந்திரஜித் உள்ளிட்ட உறுப் பினர்கள் பங்கேற்றனர்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் 5 பேர் கைது

தஞ்சாவூர், அக்.15 - தஞ்சாவூர் விளார் சாலை கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் (21).  இவர் செப். 9 ஆம் தேதி  நிகழ்ந்த தகராறில் அரி வாளால் வெட்டி கொலை  செய்யப்பட்டார். இது குறித்து தாலுகா காவல்  நிலையத்தினர் வழக்குப் பதிந்து தஞ்சாவூர் விளா ரைச் சேர்ந்த ஹரிஹரன் (30), சஞ்சய் (19), சக்தி (22),  கோகுல் (20), நாஞ்சிக் கோட்டையைச் சேர்ந்த பிர பாகரன் (20) ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், மாவட்டக்  காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பரிந்து ரையின் பேரில், இவர் களைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட  ஆட்சியர் பா. பிரியங்கா  பங்கஜம் செவ்வாயன்று உத்தரவிட்டார். இதை யடுத்து, ஹரிஹரன், சஞ்சய், சக்தி, கோகுல், பிர பாகரன் ஆகியோர் குண்டர்  தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.