5-50 தென் ஆப்பிரிக்க வீரர் உலக சாதனை
3 ஒருநாள், 3 டி-20 என 2 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டி யின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து வியாழக்கிழமை அன்று நடைபெற்ற 2ஆவது போட்டி யிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டியிலும் சதமடித்த தென் ஆப்பிரிக்க வீரர் பிரீட்ஸ்கீ (85 ரன்கள்) உலக சாதனை படைத்துள்ளார். பிரீட்ஸ்கீ தொடர்ச்சியாக மற்றும் தனது முதல் 5 ஆட்டங்களில் 50 ரன்களுக்கு மேல் (150, 83, 57, 88, 85 ரன்கள்) எடுத்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் வகை கிரிக்கெட்டில் முதல் 5 ஆட்டங்களிலும் அரை சதம் கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பிரீட்ஸ்கீ படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்தியாவின் நவ்ஜோத் சித்து தனது முதல் 4 ஆட்டங்களில் 50 ரன்களுக்கு மேல் எடுத்ததே சாதனையாக இருந்தது. அவரது 36 ஆண்டு கால சாதனையை 26 வயதான பிரீட்ஸ்கீ தற்போது முறியடித்துள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இந்தியாவின் யுகி பாம்பரி ஜோடி அவுட்
ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடுக்கட்டத்தை எட்டி யுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 14ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் யுகி பாம்பரி - நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியும், தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள பிரிட்டனின் சலிஸ்பரி - நீல் ஜோடியை எதிர்கொ ண்டது. தொடக்கத்தில் யுகி பாம்பரி - மைக்கேல் வீனஸ் ஜோடி ஆதிக்கம் செலுத்தினாலும், பின்னர் சுதாரித்துக் கொண்ட சலிஸ்பரி - நீல் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி யது. இறுதியில் 6-7 (2-7), 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் சலிஸ்பரி - நீல் ஜோடி அபார வெற்றி பெற்று இறு திக்கு முன்னேறியது. இந்தியாவின் யுகி பாம்பரி - நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறியது.