tamilnadu

கனமழைக்கு இதுவரை 4 பேர் பலி!  

கனமழைக்கு இதுவரை 4 பேர் பலி!  

விழுப்புரம் : தமிழகத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ள னர். சிதம்பரம் அருகே ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து தாய் மகள் இருவரும் பலியானார்கள். இச்சம்பவம் குறித்து அறிந்த தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. ன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் வீடு இடிந்து பச்சையம்மாள் (60) என்ற மூதாட்டி பலியானார். அதேபோல விருதுநகர் மாவட்டம், சிவகாசி திருத்தங்கல் பழைய வெள்ளையபுரம் பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவருடைய மகளும் செவிலியர் மாணவியுமான பவானி (19) வீட்டின் முன் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்து, கடந்த இரண்டு நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.