tamilnadu

img

பெரியார் மணியம்மை அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா

பெரியார் மணியம்மை அறிவியல், தொழில்நுட்ப  நிறுவனத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர், அக்.15 -  தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச் சந்திரன் வரவேற்றார். பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமை வகித்து  மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை இந்திய கடல்சார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும், ஒன்றிய – மாநில அரசுகள் உறவு குறித்த உயர்நிலை குழு உறுப்பினருமான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் கே.அசோக் வர்தன் ஷெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.  பட்டமளிப்பு விழாவில் கட்டிடக்கலை, பொறியியல், தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் கலை அறிவியல், மேலாண்மை புலன்களின் பல்வேறு துறை களைச் சார்ந்த 1,738 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். இவர்களில் 1,225 பேர்  இளங்கலை பட்டமும், 501 பேர் முது கலைப் பட்டமும், 12 பேர் முனைவர் பட்ட மும் பெற்றனர். கல்வியில் சிறப்பு நிலைகளை  அடைந்த 118 பேர் பதக்கம் பெற்றுள்ளனர் (இவர்களில் 48 பேர் தங்கம், 39 பேர் சில்வர், 31 பேர் வெண்கலப் பதக்கங்களை பெற்றனர்). டிரான்சென் டைனாமிக்ஸின் நிறுவனர்  மற்றும் தலைமை நிர்வாக முதன்மையர் கென்னித்ராஜ் அன்புக்கு, தனது துறையில்  அவர் ஆற்றிய சிறப்பு மிக்க பங்களிப்புக்காக, மதிப்புறு முனைவர் பட்டம் (ஹானரிஸ் காசா) பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில், சென்னை எத்திராஜ் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா எம். தவமணி, செயற்குழு உறுப்பினர்கள், இணை  துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப் பாட்டு நெறியாளர், பல்வேறு துறைத் தலை வர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.