தமிழ்நாட்டின் கிராமங்களுக்கும் தரமான போக்குவரத்து சேவைகளை தொடர்ந்து வழங்க புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்நிதி யாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதுமட்டுமின்றி ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்து இந்த நிதியாண்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மீண்டும் சிற்றுந்துகள் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளிலும் போக்குவரத்துச் சேவையை வழங்கிடும் நோக்கில், மாற்றியமைக்கப்பட்ட விதிமுறை களுடன் சிற்றுந்து திட்டம் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்படும். பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் அருகில் உள்ள குறளகம் கட்டடம் பகுதியில் ஒருங்கிணைந்த பன்முகப் போக்குவரத்து வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் மற்றும் உயர்தர நவீன வசதிகள் கொண்ட அலுவலக வளாகம் ஒன்று ரூ.823 கோடியில் உருவாக்கப்படும். அண்ணாநகர் மேற்கு, கலைஞர் கருணாநிதி நகர் மற்றும் மந்தைவெளியில் அமைந்துள்ள பேருந்து நிலை யங்கள் மற்றும் பணிமனைகள் தரம் உயர்த்தி நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்களும் வணிக வளாகங் களும் உருவாக்க விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக் கப்படும்.