tamilnadu

img

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் திண்டுக்கல் படைப்பாளிகளின் 30 நூல்கள் வெளியீடு

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் திண்டுக்கல் படைப்பாளிகளின் 30 நூல்கள் வெளியீடு

திண்டுக்கல், செப்.2- திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் மாவட்ட படைப்பாளிகளின் 30 நூல்கள் வெளியிடப்பட்டன. செவ்வாயன்று காலை 11.30 மணியளவில் கவிஞர் ஜெயதேவன் நினைவு மேடையில் நடைபெற்ற நிகழ்விற்கு இலக்கியக் களத்தின் இணைச் செயலாளர் மு.ராம நிதி தலைமை வகித்தார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்க றிஞர் சு.சிவக்குமார் பங்கேற்றார். தமுஎகச மாவட்டச் செயலாளர் கவிஞர் கவிவாணன், பேராசிரியர் முனைவர் சேரிவாணன், இலக்கியக் களத்தின் தலைவர் பேரா.முனைவர் ரெ.மனோகரன், செயலாளர் எஸ்.கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பா ளர்களாக பங்கேற்றனர். கவிஞர் பூர்ணா எழுதிய திண்டுக்கல் சீமை, அரிஸ்ட்டாட்டில் எழு திய திண்டுக் கல் வரலாறும், தொன்மையும், ரகு நாத் எழுதிய நில் சிரி வாசி, கவிஞர் முராநி எழுதிய அன்புடன் நானும், நீயும், கவிதை சங்கமம், கவிஞர் சுசிலா மேரி எழுதிய கூட்டாஞ்சோறு, திண்டுக்கல் குமரேசன் எழுதிய அப்பாவின் சைக்கிள், ஏ.எம்.முருகேசன் எழுதிய ஆல்பர்ட் ஐன்ஸ்டின், தீட்சண்யா எழுதிய  தீட்சண்யாவின் கவிதைகள், நித்திலா எழுதிய செவிகொடு செல்லமே, சுப்பையா முருகன் எழுதிய தீபாவளி கதவுகள், கிறிஸ்டியன் கீலர் எழுதிய நெல்லை எனும் நல்ல நிலம், சின்னமனூர் சரவணக்குமார் எழுதிய மலர்துளிகள், கவிஞர் இலமு எழுதிய சபிக்கப்பட்டவர்களின் தேசம் காசா உள்ளிட்ட 30 நூல்கள் வெளியிடப்பட்டன.  பிற்பகல் 2 மணிக்கு சர்வதேச திரைப்பட நிகழ்வில் கொட்டுக்காளி தமிழ் திரைப்படம் திரையிடப்பட்டது.