tamilnadu

img

கொரோனா கண்காணிப்பில் 2,95,159 பேர்.... அதிர்ச்சியில் மதுரை மாவட்டம்

மதுரை:
தமிழகத்திலேயே கொரோனா தொற்றால் முதல் உயிரிழப்பு நடைபெற்றது சங்கம் வளர்த்த மதுரையில் தான். தற்போது மதுரை மாவட்டத்தில் 17 பேர் கொரோனா-வால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். இவர்களோடு தொடர்புடைய 381 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகரில் மேலமடை, நரிமேடு, தபால்தந்தி நகர், புறநகர் பகுதியில் எழுமலை, திருமங்கலம், மேலூர் பகுதிகள் தீவிரக் கண்காணிப்பில் உள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் 69,018 குடும்பங்களில் உள்ள 2,95.159 பேர் கண்காணிக்கப்படுகின்றனர்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 150 படுக்கைகளுடன் 120 வெண்டிலேட்டர்கள் உள்ளன. தனியார் மருத்துவமனையில் ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் 2,920 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் மூலம் உணவு வழங்கப்படுகிறது. இதர தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உணவு வழங்குகிறது. ஆதரவற்ற 410 பேருக்கு தினமும் மூன்று வேளை உணவு, இருப்பிடம், மருத்துவ வசதி உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது, மதுரை சக்கிமங்கலத்தில் நரிக்குறவர் சமூகத்தினர், பார்வையற்றவர்கள் 419 பேருக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்கி வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் 8,54,384 ரேசன் அட்டைதாரர்களில் 5,93,439 அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.1000 வழங்கப்பட்டுவிட்டது. 2,55,945 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்.இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.அதே நேரத்தில் 50,256 சீனி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000-இல்லையென்பது வேறுவிஷயம்.
 

;