ஈரோட்டில் 253 தீக்கதிர் சந்தா வழங்கல்
மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு சார்பில், தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா வழங்கும் நிகழ்ச்சி வெள்ளியன்று கட்சி மாவட்டக்குழு அலுவலகத் தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகநயினாரிடம் 213 ஆண்டு சந்தா, 40 அரையாண்டு சந்தாவிற்கான தொகை ரூ.5 லட்சத்து 35 ஆயிரம் வழங்கப்பட்டது. அதேபோல் கியூபா ஒருமைப்பாட்டு நிதியாக ரூ.40 ஆயிரத்து 427 வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்ரமணியன், சி.முருகேசன், கே.மாரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.