ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று சென்னையில் உள்ள கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர். சங்கத்தின் தலைவர் கு.விஜயன் தலைமையிலான இந்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொருளாளர் ச.டானியல் ஜெயசிங் தொடங்கி வைத்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் வை.கோபிநாத் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.காந்திராஜன் நிறைவுரையாற்றினார்.
