tamilnadu

img

‘பாசிச பாஜக - அடிமை அதிமுக அணியை டெபாசிட் இழக்க செய்வோம்’: முதல்வர்

‘பாசிச பாஜக - அடிமை அதிமுக அணியை டெபாசிட் இழக்க செய்வோம்’: முதல்வர்

மதுரை, பிப்.21- தமிழக சட்டப் பேரவைக்கு ஏப்  ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்  கும் நிலையில், மதுரை உத்தங்குடி யில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி  வாக்குச் சாவடி’ என்ற தலைப்பில்  தென்மண்டல திமுக வாக்குச் சாவடி  முகவர்கள் மாநாடு, சனிக்கிழமை (பிப். 21) நடைபெற்றது.  இதில் திமுக தலைவரும் முதல மைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “வாக்காளர் சிறப்பு தீவிர  திருத்தப் பணிகள் மூலம் பல மாநி லங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட னர். ஆனால், அது தமிழகத்தில் மட்டும் தடுக்கப்பட்டது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி  நிச்சயம்; அதற்கும் மேல் வெல்வது நமது இலக்கு” என்று அவர் தெரி வித்தார். “கூட்டணி, தொகுதி பங்கீடு என  அனைத்திலும் திமுகவே முதலி டத்தில் இருக்கும் என்றும், தேர்தல்  பணியில் ஒவ்வொரு வாக்காளரை யும் குறைந்தது 5 முறையாவது சந்தித்து வாக்குகளை திரட்ட வேண்டும்” என்றும் முகவர்களிடம் வலியுறுத்தினார்.  “அடுத்த 2 மாதம் உங்களுக்கு ஓய்வே கிடையாது. களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்”  என்று அவர் கூறினார். “பிரதமர் மோடியிடம் எடப்பாடி  பழனிசாமியால் எந்தக் கோரிக்கை யும் வைக்க முடியவில்லை” என சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “ஒன்றிய அரசை எதிர்த்தால் வழக்கு போடு வார்களா, போடுங்கள். நாங்கள் பார்க்காத மிசாவா, தடாவா?” என்று  சவால் விடுத்தார். “தமிழ்நாடு அணியா, தில்லி அணியா என்ற கேள்வியை மக்களி டம் எழுப்புங்கள். தமிழ்நாடு அணி  ஜெயிக்க வேண்டும் என்றால் திமுக  ஜெயிக்கணும். எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க வேண்டும். பாசிச  பாஜக, அடிமை அதிமுகவை விரட்டி வெல்வோம் ஒன்றாக!” என்றும் முதலமைச்சர் தெரிவித் தார்.