மதுரை, மே 10-மதுரையில் ஒரே வழித்தடத் தில் ரயில்கள் இயக்கப்பட்ட விவகாரத்தில் ரயில் நிலைய மேலாளர்கள் உட்பட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். மதுரையிலிருந்து செங்கோட் டைக்கு செல்லும் பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையம் வந்தது. பின்பு சுமார் 1 மணி நேரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கூச்சலிட்டனர். இதன் பிறகு அந்த ரயில் புறப்பட்டது. சுமார் 200 மீட்டர் தூரம் ரயில் சென்ற நிலையில், செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு வரும் ரயில் வந்துகொண்டிருந்தது.இதனால் இரு ரயில்களும் நேருக்குநேர் மோதும் அபாயம் ஏற்பட்டது. இதனைக் கண்டறிந்த ரயில்வே கேட் கீப்பர், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தன் பேரில் மதுரை-செங்கோட்டை ரயில் நிறுத்தப் பட்டு மீண்டும் திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில்நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் அங்குள்ள கதவுகளையும் சேதப்படுத்தினர். இதையடுத்து சுமார் இரண்டு மணிநேரம் தாமதமாக இரவு 7.30 மணிக்கு மதுரை செங்கோட்டை ரயில் புறப்பட்டு சென்றது.இந்நிலையில் ஈரோடு, மயிலாடுதுறை - திருநெல்வேலி ரயில் இரவு 7.30 மணிக்கு திருமங்கலம் வந்தது. தூத்துக்குடி, விருதுநகர் வழியாக மதுரை செல்லும் ரயில்களுக்காக திருநெல்வேலி ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக ரயில் நின்றதால் அதிலிருந்த பயணிகள் பலர் பேருந்துகள் மூலம் நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றனர்.இரண்டு ரயில்கள் நேருக்குநேர் மோதும் விபத்து தடுக்கப் பட்டாலும், சிக்னல் பிரச்சனையால் ரயில்கள் தாமதமானதால் பயணிகள் குறிப்பாக முதியவர்கள், பெண்கள் பெரும் அவதியடைந்தனர். மதுரையில் ஒரே வழித்தடத்தில் ரயில்கள் இயக் கப்பட்டதற்கு மொழிப் பிரச் சனையே காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே இவ்விவகாரத்தில் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சிவசிங் மீனா, திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக் குமார், திருமங்கலம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் முருகானந்தம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.