tamilnadu

சாதி ஆணவப் படுகொலையில் மேலும் 2 பேர் கைது

சாதி ஆணவப் படுகொலையில் மேலும் 2 பேர் கைது

சின்னாளப்பட்டி, அக்.16- நிலக்கோட்டை அருகே சாதி ஆணவப்படுகொலை சம்பவத்தில் பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி அருகே உள்ள இராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). இவர் கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகள் ஆர்த்தி (வயது 21) என்பவரை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பெண்ணின் தந்தையால், ராமச்சந்திரன் சாதி  ஆணவப்படுகொலை செய்யப் பட்டார்.  இதில் பெண்ணின் தந்தை கைதுசெய்யப்பட்டார். நிலக்கோட்டை துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார், காவல் ஆய்வாளர் சத்தியபிரபா தலைமை யிலான தனிப்படை விசாரணை நடத்தியது. இதில் கொலை யில் தொடர்புடைய சந்திரனின் மனைவி அன்புச்செல்வி (39) மற்றும் மகன் ரிவின் (23) ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.