டிசம்பர் மாதம் தஞ்சாவூரில் தமுஎகச 16 ஆவது மாநில மாநாடு
சென்னை: கலை இலக்கியம், கருத்துரிமை, பண்பாடு சார்ந்து ஐம்பதாண்டுகளாக படைப் பூக்கத்துடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16 ஆவது மாநில மாநாடு 2025 டிசம்பர் மாதம் தஞ்சாவூரில் நடை பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். ‘வெறுப்பின் கொற்றம் வீழ்க! அன்பே அறமென எழுக!’ என்ற முழக்கத்துடன் இம்மாநாடு நடைபெறும் என்று மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் சிலைக்கு அரசு அனுமதி
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவ ராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5-ஆம் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஜூலை 5 ஆம் தேதி, அவரின் நினைவிடம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பொத்தூரில் சிலை திறக்க காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், சிலை வைக்க அனுமதி அளிப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில் பொற் கொடி தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்பட்டது.
மீனவர் பிரச்சனையில் தலையிட கோரிக்கை
சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழ் நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், அபராதம் விதிக்கப்பட்டு வருவதும் தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. இனி எல்லை மீறி வருகிற மீனவர்களுக்கு எந்த கருணையும் காட்டப்படாது என்று இலங்கை மீன வத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அறி வித்திருக்கிறார். இந்த அறிவிப்பின் மூலமாக இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லைகளைத் தாண்டி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வந்தால் கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறது குறித்து இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் மோடி இலங்கை அரசுடன் உடனடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியிருக்கிறார்.
பாஜக, திமுகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: விஜய் அறிவிப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் செயற் குழுக் கூட்டம், கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே பனையூரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெற்றது. இதில் 2026 தேர்தலில் விஜய்யை முத லமைச்சர் வேட்பாளராக கொண்டு தேர்தலை எதிர் கொள்வது என்றும் தமிழக வெற்றிக் கழகம் தலை மையிலேயே கூட்டணி அமையும் என்றும், கூட்டணி குறித்து முடிவு எடுக்க அவருக்கு முழு அதிகாரத்தையும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய விஜய், பாஜக, திமுகவுடன் என்றைக் கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்றும் கூறினார்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவுதமி
சென்னை: நடிகை கவுதமியின் சொத்துக்களை அழகப்பன் என்பவர் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கு மற்றும் புகாரின் அடிப்படையில் அழகப்பன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலை யில், சாட்சியின் அடிப்படையில் நடிகை கவுதமி அம லாக்கத்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார்.
நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை: வெறுப்புப் பேச்சு குறித்த, முன்னாள் அமைச்சர் க. பொன் முடிக்கு எதிரான வழக்கு களை புலன் விசாரணை செய்ய காவல்துறை யினர் தயங்கினால் சிபிஐக்கு மாற்றப்படும் என்று சென்னை உயர்நீதி மன்றம் எச்சரிக்கை செய் திருக்கிறது.
சிறுவன் கொலை வழக்கு - கல்லூரி மாணவி கைது
ஓசூர்: ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறு வன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவி கைது செய்யப் பட்டுள்ளார். மாதவன் தன் காதலியான கல்லூரி மாணவி ரதியுடன் தனி மையில் இருந்ததை சிறுவன் பார்த்துவிட்ட தால் சிறுவனை காரில் கடத்தி கொலை செய்த கொடூர சம்பவத்தில் மாதவன் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந் தார். இப்போது கல்லூரி மாணவி ரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்க்கு இன்ப அதிர்ச்சி
பொள்ளாச்சி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 494 மதிப் பெண்கள் எடுத்த குருதீப் என்ற மாணவர், மறுகூட்டலுக்கு விண் ணப்பி த்திருந்தார். சமூக அறிவியலில் பெற்றி ருந்த 95 மதிப்பெண், மறுகூட்டலில் 100 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். இதன் மூலம் அவரது மதிப்பெண் 499 ஆக உயர்ந்துள்ளது. தமிழ் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண் எடுத்திருக் கும் குருதீப், மற்ற அனைத்து பாடங்களில் முழு மதிப்பெண் 100 வாங்கி அசத்தியிருக் கிறார்.
ரேபிஸ்: வழிகாட்டுதல் வெளியீடு
சென்னை: “நாய் கடித்த இடத்தை முறை யாக கழுவாமல் இருப் பது, தாமதமாக சிகிச் சைக்கு வருவது, தடுப் பூசி கால அட்டவ ணையை மீறுவது ஆகி யவை உயிருக்கே ஆபத் தாக மாறும்.” கேரளா வில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியும் இரு சிறார் கள் உயிரிழப்பை அடுத்து, ரேபிஸ் சிகிச்சை வழிகாட்டுதலை தமிழ் நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் தவெகவுக்கு கண்டனம்
சென்னை, ஜூலை 4 - மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, சென்னையில் ஜூலை 6 அன்று போராட்டம் நடத்துவதற்கு தவெகவினர் அனு மதி கோரிய நிலையில், அது இரண்டு முறை நிராகரிக் கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினரை அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்ட நிலையில், நீதிபதி வேல்முருகன் மறுப்பு தெரிவித்தார். மேலும், காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன. உங்களுக்கு ஏன் அவசரம்? உங்களுக்கான வேலையை மட்டும் தான் காவல்துறை பார்க்க வேண்டுமா? என்றும் சரமாரி யாக கேள்வி எழுப்பியதோடு கடும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன், எண்ணிடப்படும் பட்சத்தில் திங்கள்கிழமை விசா ரிப்பதாகவும், போராட்டத்தை தள்ளிவைக்கவும் தவெக வுக்கு அறிவுரை வழங்கினார்.
கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்
உதகை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் கைதான ஆசிரியர் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆசிரியர் செந்தில்குமாரை தற்காலிக பணி யிடை நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் ஏற்கனவே செந்தில்குமார் கைது செய்யப்பட்டு உள்ளார்.