தருமபுரி வாசிக்கிறது’ 1.62 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
தருமபுரி, செப்.24- தருமபுரி மாவட்டம் முழுவ தும் செவ்வாயன்று நடைபெற்ற ‘தருமபுரி வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சியில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 710 மாணவ, மாணவி கள் பங்கேற்று புத்தகங்களை வாசித்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்க லம் அரசு மகளிர் கலைக்கல்லூரி யில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா வெள்ளி யன்று (நாளை) தொடங்கவுள்ளது. இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ‘தருமபுரி வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி செவ் வாயன்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு பேசுகை யில், அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம், புத்தக வாசிப்பு பழக்கத்தை கொண்டு சேர்ப்பது இந்த நிகழ்ச்சியின் நோக் கமாகும். புத்தகங்கள் மூலம் நாம் அறிவை வளர்த்துக் கொள்ள முடி யும், புதிய விஷயங்களை அறிய லாம், மேலும் உலகை வேறு கோணங்களில் பார்க்க முடியும். புத்தகங்கள் நம்மை சிறந்த மனி தர்களாக மாற்றுகிறது. சிறப்பான வாழ்க்கைக்கும், சிறந்த வளர்ச்சிக் கும் கல்வி மிக அவசியம். மாணவ பருவம் என்பது ஒவ்வொருவரை யும் நல்வழிப்படுத்தப்பட வேண் டிய பருவமாகும். அவ்வாறு நவ் வழிப்படுத்த கல்வி மட்டுமே சிறந்த தாக இருக்கும். அதற்கு புத்தகங் களை படிப்பது மிக மிக அவசியம். நவீன செல்போன்களும் சமூக ஊட கங்களும் சாதாரணமாகி உள்ள இன்றைய சூழலில், அவற்றுக்கு அடிமையாகி விடாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். படிப்பறிவு ஒரு மனிதனுக்கு சிறந்த மன நிலையை உருவாக் கும். வாசிப்புப் பழக்கம் ஒவ்வொரு வரையும் நல்வழிப்படுத்தி அவர் களை நல்லவர்களாக உருவாக்க துணை நிற்கும். படிப்பு மிக அவ சியம் என்பதை உணர்ந்து இன் றைய தலைமுறையினர் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும். எனவே, அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள் உள்ளிட்ட அனைவரும் வருகை தந்து, அறிவுசார் புத்தகங்களை வாங்கி, புத்தகம் வாசிக்கும் பழக் கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண் டும். மாவட்டம் முழுவதும் நடந்த ‘தருமபுரி வாசிக்கிறது’ நிகழ்ச்சி யில் 1,616 பள்ளி, கல்லூரிகளில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 710 மாணவ, மாணவிகள் பங்கேற்று புத்தகங் கள் வாசித்தனர், என்றார். இந்நிகழ்ச்சிகளில், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, மாவட்ட நூலக அலுவலர் கோகில வாணி, தகடூர் புத்தகப் பேரவை தலைவர் இரா.சிசுபாலன், ஒருங்கி ணைப்பாளர் தங்கமணி, பொருளா ளர் கார்த்திகேயன், காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல் வர் (பொ) ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.