தென்காசி, சிவகிரி, ஆலங்குளம், பாவூர்சத்திரத்தில் 138 தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு
தென்காசி, ஆக. 2- தென்காசி மாவட்டத் தில், தென்காசி, சிவகிரி, ஆலங்குளம், பாவூர்சத்தி ரத்தில் 138 தீக்கதிர் சந்தாக்க ளுக்கான தொகை ஒப்ப டைக்கப்பட்டது. சிவகிரியில் இடைக் கமிட்டி செயலாளர் நட ராஜன் தலைமையில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகிரி இடைக்கமிட்டி சார்பாக 29 சந்தா மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ் கரன் ஆகியோரிடம் ஒப்ப டைக்கபட்டது. இந்நிகழ் வில், மாவட்டச் செயலாளர் உச்சிமாகாளி, மாவட்டக் குழு உறுப்பினர் மா.சுப்புலட் சுமி, இடைக் கமிட்டி உறுப்பி னர்கள், கட்சி தோழர்கள் கலந்துகொண்டனர். ஆலங்குளம் இடைக் கமிட்டி சார்பில் 42 தீக்கதிர் சந்தாவை மாவட்ட செயற் குழு உறுப்பினர் குணசீலன் தலைமையிலும், கீழப்பா வூர் சார்பில் 23 தீக்கதிர் சந்தா வை கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் தங்கம் தலை மையிலும் ஒப்படைக்கப் பட்டது. தென்காசியில் நடை பெற்ற தீக்கதிர் சந்தா ஒப்ப டைப்பு நிகழ்ச்சிக்கு வட்டார செயலாளர் பட்டாபிராமன் தலைமை தாங்கினார். தென்காசி இடைக்கமிட்டி சார்பில் 44 தீக்கதிர் சந்தா ஒப்படைக்கப்பட்டது.
