130 வது சட்டத் திருத்தம் ஒரு கருப்புச் சட்டம் தி க தலைவர் கி. வீரமணி கண்டனம்
சென்னை, ஆக. 21 - ஒன்றிய அரசின் 130-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் அப்பட்டமான கருப்புச் சட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாடாளு மன்ற மக்களவை யில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் முன்மொழியப்பட்ட 130-ஆவது அரசியல் சட்டத் திருத்த மசோதா ஜனநாய கத்திற்கான சவப்பெட்டியை ஆயத்தப்படுத்தி, சர்வாதி கார ஆட்சியை மறைமுக மாக செயல்படுத்தும் புதிய ஏற்பாடு” என்று குறிப்பிட்டுள் ளார். “விசாரணைக் கைதியாக 30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவி தானாகவே பறிபோகும் என்பது இயற்கை நீதிக்கும் எதிரான கருப்புச் சட்டம்” என்றும், “இம்மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனக் குரல் எழ வேண்டும்” என்றும் வீரமணி தெரிவித்துள்ளார். ஜவாஹிருல்லா கண்டனம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவா ஹிருல்லா எம்எல்ஏ வெளி யிட்டிருக்கும் அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசு, தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற குறிக் கோளில் எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தியே இந்த கருப்புச் சட்ட மசோதா” என கண்டனம் தெரிவித்துள்ளார்.