பெருமாநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 1226 பேருக்கு பரிசோதனை, உணவு குறித்து விழிப்புணர்வு
திருப்பூர், ஆக.30- திருப்பூர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நான்காவது இடமாக பெரு மாநல்லூரில் நடைபெற்றது. இதில் 1226 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இம் முகாம் பொதுமக்களிடம் பெரும் வர வேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் மருந்து, மாத்திரைகளை கூடுதலாக இருப்பு வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரினர். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சனியன்று இம்முகாம் நடைபெற்றது. பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் இடம் பெற்றிருந்தன. உணவு பாது காப்பு துறை விழிப்புணர்வு அரங்கம், மருத் துவ காப்பீடு பதிவு, தூய்மை பணியாளர்கள் நலவாரிய உதவி மையம், கட்டிட தொழிலா ளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் கள் பதிவு உதவி மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. உணவு குறித்து விழிப்புணர்வு உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், வண்ணம் சேர்க்கப்பட்ட உணவு பண்டங் கள் உண்பதை குறைக்க வேண்டும். மருந்த கங்களில் கிடைக்கும் டின்ஞெர் அயோடின் மூலம் பாலில் இருந்து வரும் நெய், தயிர், வெண்ணை உள்ளிட்ட பொருட்களில் கலப்ப டத்தை கண்டறிய முடியும். பிளாஸ்டிக் அரிசியா? இரும்பு சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவற்றால் செறிவூட்டப் பட்ட அரிசியுடன் சாதா அரிசி கலந்து வழங்கப் படுகிறது. இந்த எப்+ அரசியை பிளாஸ் டிக் அரசி என வதந்தி பரப்பப்படுகிறது. உட லுக்கு தேவையான ஊட்டத்துகளுக்காக செறிவூட்டப்பட்ட அரிசியுடன் கலந்து பொது விநியோக கடைகளில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இதில் அச்சம் கொள்ள தேவை யில்லை என்பது உள்ளிட்ட உணவு சார்ந்த பல் வேறு சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் பணியாற்றிய 400 பேர் இந்த முகாம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் கூறுகையில், இம்முகாமில் மொத் தம் 21 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 40 மருத்துவர்கள், 100 தன்னார்வலர் உள்பட 400 பேர் பணி செய்தனர் இம்மு காமில் பங்கேற்றோருக்கு இங்கு வழங்கப் பட்ட மெடிக்கல் ரிப்போர்ட் மற்றும் பிரத்யேக அடையாள எண்ணை வைத்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம். இங்கு 477 ஆண் கள், 752 பெண்கள் என மொத்தம் 1226 பேர் பரி சோதனை செய்து, சிகிச்சை பெற்றனர் என் றார். போதுமான மருந்து தேவை இம்முயற்சி வரவேற்கத்தக்கது. மருத்து வமனைக்கு செல்ல முடியாத முதியவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சோத னைகளும் ஒரே இடத்தில் மேற்கொள்ளப் பட்டது. இந்த சோதனைகளை தனியார் மருத் துவமனைகளில் செய்தால் குறைந்தது ரூ.3 ஆயிரம் ஆகும். மருந்து, மாத்திரைகள் பற் றாக்குறையாக இருந்தது. இதனால் மருத் துவர்கள் குறிப்பிட்ட அளவு மாத்திரைகள் வழங்காமல், குறைந்து அளவு வழங்கினர். முகாமில் தேவையான மருந்து இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற னர். வடமாநில தொழிலாளர்களும் இம்முகா மில் பயன்பெற்றனர்.