tamilnadu

img

தீபாவளிக்கு “டின் பீர்” பட்டாசு

மதுரை, நவ.4-  நவம்பர் 12 தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி வந்தாலே பட்டாசு, மத்தாப்பு, கொண் டாட்டம், கோலாகலம் தான். இந்த ஆண்டும் தீபா வளியை எப்படிக் கொண்டா டுவது என்ற சிந்தனையோ டும், கற்பனைகளுடனும் சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் வரை காத்திருக்கிறார்கள். குறிப்பாக  இளைஞர் களை கவருவதற்காக பட்டாசு உற்பத்தியாளர்கள் டின் பீர் பட்டாசை இறக்கி யுள்ளனர். இந்தாண்டு ’டின் பீர்’ பட்டாசுகள் விற்பனை அதிகளவில் இருக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் இருக்கி றார்கள்.  இதைக் குடிக்க முடியாது. ஆனால் வெடிக்கலாம். பார்க்க அப்படியே ஒரிஜினல் டின் பீர் மாதிரியே உள்ள இந்த பட்டாசுகளை பல முன்னணி நிறுவனங்கள் தயாரித்துள்ளன.