ரயில்வே கேட்டுகளில் 11 பாதுகாப்பு நடைமுறைகள் அறிவிப்பு
சென்னை, ஜூலை 11- கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நடந்த ரயில் விபத்தை தொடர்ந்து, இந்திய ரயில்வே துறை அனைத்து கேட்டுகளி லும் கடைப்பிடிக்க வேண்டிய 11 முக்கிய பாதுகாப்பு விதிமுறைகளை அறிவித் துள்ளது. கடந்த ஜூலை 8 ஆம் தேதி பள்ளி வாகனம் மீது பயணிகள் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சோ கத்தை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனைத்து மண்டல அதி காரிகளுடன் காணொலி மூலம் கலந்தாலோசித்த பின்னர் இந்த உத்தரவுகள் வெளியிடப்பட்டன. அனைத்து ரயில்வே கேட்க ளிலும் பதிவு அமைப்புடன் கூடிய கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட வேண்டும். இந்த கேம ராக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு சோலார் அமைப்பு மற்றும் பேட்டரி வசதிகள் செய்யப்பட வேண்டும். அனைத்து ரயில்வே கேட்களையும் இன்டர்லாக்கிங் முறைக்கு மாற்றுவது, இன்டர்லாக்கிங் செய்யப்படாத கேட்களை தினமும் ஆய்வு செய்வது, குரல் பதிவு அமைப்பு செயல்படுத்துவது, ரயில் வருகையை ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பது உள்ளிட்ட நட வடிக்கைகள் இதில் அடங்கும். ரயில்வே சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலம் கட்டு மானப் பணிகளையும் துரிதப்படுத்த உத்தர விடப்பட்டுள்ளது.
ரயில் நிலைய மேலாளர் உள்பட 11 பேரிடம் விசாரணை
திருச்சிராப்பள்ளி, ஜூலை 11 - கடலூர் மாவட்டம் செம்மங் குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியது. இதில் ஒரு மாணவி உட்பட 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த விசார ணைக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், திடீர் திருப்பமாக பழைய விசார ணைக் குழு கலைக்கப்பட்டு, திருச்சி ரயில்வே கோட்ட பாது காப்பு அதிகாரி மகேஷ்குமார் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வினர் புதன்கிழமை முதல் தங்க ளது விசாரணையை தொடங்கி யுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கேட் கீப்பர், லோகோ பைலட், முதுநிலை உதவி லோகோ பைலட், ரயில் மேலாளர், ஆலம் பாக்கம் ரயில் நிலைய இரண்டு மேலாளர்கள், கடலூர் ரயில் நிலைய ஒரு மேலாளர், கடலூர் இருப்பு பாதை பகுதி பொறியா ளர்கள் இரண்டு பேர், ரயில் போக்குவரத்து ஆய்வாளர், திருச்சி, கடலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு முதன்மை லோகோ ஆய்வாளர், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநர் என 13 பேரை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப் பட்டது. விபத்தில் நேரடியாக தொடர்புடைய கேட் கீப்பர் சிறை யிலும், பள்ளி வேன் ஓட்டுநர் மருத்துவமனையிலும் உள்ளனர். ஆகவே மீதமுள்ள 11 பேரில் 5 பேர் வியாழனன்று காலை ஆஜராகினர். இவர்களிடம், தென்னக ரயில்வே தலைமை யகம் சார்பில், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையில், மூன்று பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒவ்வொரு வரிடமும் தனித்தனியாக விசா ரணை நடத்தி, சம்பந்தப்பட் டவர்களிடம் எழுத்துப்பூர்வமாக பதில் பெற்று தலைமைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப் பட உள்ளது.