tamilnadu

img

108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் வேலையை  8 மணி நேரமாக்கி உத்தர

108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் வேலையை  8 மணி நேரமாக்கி உத்தரவு

சென்னை, மார்ச் 20- 108 ஆம்புலன்ஸ் பணியாளர் களுக்கான பணி நேரத்தை தற்போதுள்ள 12 மணி நேரத்தி லிருந்து 8 மணி நேரமாக்க வேண்டும் என சென்னை  தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது. 12 மணி நேர பணி காரணமாக தூக்கமின்மை, உடல்நலக்  குறைவு மற்றும் விபத்துகள் நேர்கின்றன என்றும் இது தொழி லாளர் சட்டத்திற்கு விரோதமானது என்றும் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கம் வாதிட்டது. நிறுவனமான  EMRI-GHS தரப்பில் நாடு முழுவதும் 12 மணிநேர பணி நடை முறை பின்பற்றப்படுவதாக வாதிட்டது.  தீர்ப்பாயத் தலைவர் டாக்டர் பி.முருகன், சர்வதேச தொழி லாளர் அமைப்பு விதிகளின்படி ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணி நேரம் என்பதை ஏற்று நிறுவனத்திற்கு உத்தர விட்டுள்ளார். இந்த உத்தரவு அரசிதழில் அறிவிக்கப்பட்ட 30  நாட்களில் அமலுக்கு வரும். அதுவரை 12 மணி நேரம் பணி யாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பெண் பணியாளர்களுக்கு தனி ஓய்வறை  மற்றும் கழிவறை வசதிகள் அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.