tamilnadu

img

மருந்துக்கு 100 % வரி; டிரம்ப் அடுத்த தாக்குதல்!

மருந்துக்கு 100 % வரி; டிரம்ப் அடுத்த தாக்குதல்!

வாஷிங்டன், செப். 26 - அமெரிக்கா இறக்குமதி செய்யும் பல்வேறு பொருட்கள் மீதான வரி களை பலமடங்கு உயர்த்திய, அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப், தற் போது மருந்துகளுக்கும் 100 சத விகிதம் வரி விதித்துள்ளார். இதேபோல வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகள வில் இறக்குமதி செய்யப்படும்- சமை யலறையில் பாத்திரங்கள் வைக்கும் அலமாரி, குளியலறைப் பொருட்கள் ஆகியவற்றிற்கு 50 சதவிகிதம், மரச்சாமான்களுக்கு 30 சதவிகிதம் என்றும் இறக்குமதி வரியை டிரம்ப்  விதித்துள்ளார். இந்த வரிவிதிப்பு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.  மருந்துகளைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் உற்பத்தி நிலையங் களை வைத்துள்ள மருந்து நிறுவன ங்கள், தற்போது அமெரிக்காவில் உற் பத்தி நிலையத்துக்கான கட்டுமான பணிகளை துவங்கியுள்ள நிறுவனங் கள் ஆகியவற்றுக்கு மட்டும் இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. “அமெரிக்காவில் உற்பத்தி செய்து, அமெரிக்காவில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன்” என்று டிரம்ப் கூறிக்கொண்டுள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கையால் மருந்து உற்பத்தி செய்யும் நிறு வனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும் என்றாலும் இந்தியாவுக்கு பெரியள வில் பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது. உலகின் மிகப் பெரிய மருந்துச் சந்தையாக அமெரிக்கா இருக்கும் நிலையில், அமெரிக்காவின் மொத்த மருந்து இறக்குமதியில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவு. பிராண்டட் மருந்துகளை (Branded Drugs) குறி வைத்தே டிரம்ப் வரி விதித்துள்ளார். இந்தியாவில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் பெருமளவு ஜெனெரிக் மருந்துகளை தான் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இதனால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என இந்திய மருந்து உற்பத்தி துறையில் பணியாற்றி வரும் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.  2024-இல் இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் ( 13.1 பில்லியன் டாலர்கள்) மதிப்பிற்கு மருந்து ஏற்றுமதி இருந்தது. இது அமெரிக்காவின் மொத்த மருந்து இறக்குமதியில் 5.3 சதவிகிதம் மட்டுமே. அமெரிக்கா அதிகபட்சமாக அயர் லாந்திடம் இருந்து  30 சதவிகிதமும், சுவிட்சர்லாந்திடம் இருந்து 8.8 சதவிகி தமும், ஜெர்மனியிடம் இருந்து 7.8சத விகிதமும் இறக்குமதி செய்கிறது.  எனவே, டிரம்பின் 100 சதவிகித வரியானது “பிராண்டட் மருந்து களைப் பற்றியது—இது சீனா மற்றும் இந்தியா வழங்கும் ஜெனெரிக் மருந்துகளைப் பாதிக்காது,” என்று சிட்டி வெல்த் ஆசிய முதலீட்டு உத்தி யின் தலைவர் கென் பெங் தெரி வித்துள்ளார்.  2025 நிதியாண்டில் இந்தியா அமெரிக்காவிற்கு சுமார் 93,156 கோடி மதிப்பில் ஜெனெரிக் மருந்துகளை ஏற்றுமதி செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.