காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது
சென்னை, ஆக.16- இந்திய யூனியன் முஸ் லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீ னுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி னார். சென்னையில் நடை பெற்ற சுதந்திர தின விழா வின் போது, விருதுடன் ரூ. 10 லட்சம் விருதுத்தொகை மற்றும் சான்றிதழையும் முத லமைச்சர் வழங்கினார். இஸ்ரோ தலைவர் நாரா யணனுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது, துளசிமதி முருகேசனுக்கு துணிவு சாகச செய லுக்கான கல்பனா சாவ்லா விருதும், தலா ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பதக்கத்துடன் வழங்கப் பட்டது.