வல்லத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் தொடக்கம்
தஞ்சாவூர், ஆக.2- தஞ்சாவூர் அருகே வல்லத்தில் நடை பெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” புதிய திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார். சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் அருகே வல்லம் செயின்ட் சேவியர் நடுநிலைப் பள்ளி யில் நடைபெற்ற, முகாமிற்கு மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். தஞ்சாவூர் எம்.பி., ச.முரசொலி, எம்எல்ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே. ஜி.நீலமேகம், க.அன்பழகன், கா.அண்ணா துரை, என்.அசோக்குமார், தஞ்சாவூர் மாநக ராட்சி மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் அஞ்சகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் பொது மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை சார்பில் 3 பயனா ளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஒரு பயனாளிக்கு திருமண உதவித் தொகைக்கான ஆணை, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் (தாட்கோ) சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினார்.