சென்னை, செப். 24 - தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகளில், ஆய்வக நுட்பனர்களை தொகுப் பூதிய முறையில் நியமிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட் டுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் பொன்விழா நிறைவு மாநில மாநாடு ஞாயிறன்று (செப்.24) சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஆய்வக நுட்பனர்களுக்கு மூன்று கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும், தலைமை ஆய்வக நுட்பனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், மருத்துவ ஆய்வ கங்களை 24 மணி நேர பணியாக அறிவித்து அதற்கான கட்ட மைப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20க்கும் மேற் பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டிற்கு, சங்கத்தின் தலைவர் மா.செல்வகுமார் தலை மை தாங்கினார். மாநிலச் செயலாளர் த.ஏழுமலை வரவேற் றார். துணைத்தலைவர் எம்.என்.சாந்தாராமன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தமிழ் நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் கே.எம்.தியா கராஜன் மாநாட்டை தொடங்கி வைத்தார். பொன்விழா மாநாட்டு சிறப்பு அறிக்கையை முன்வைத்து சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் வீ.பார்த்தசாரதி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் மு.அன்ப ரசு, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் மற்றும் நுட்ப னர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி கள், தோழமை சங்கத் தலைவர் கள் வாழ்த்தி பேசினர். மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் கோ.சுகுமார் பேசி னார். பொருளாளர் நா.சங்கர் நன்றி கூறினார்.