நாடாளுமன்றம் நோக்கி ‘இந்தியா கூட்டணி’ எம்.பி.க்கள் பேரணி
பீகாரில் திருத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கும் விவகாரம் குறித்து விவாதிக்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வெள்ளியன்று 5வது நாள் போராட்டத்தில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.