tamilnadu

img

‘சாதி பிரிவினைகள்தான் இந்தியாவின் பலவீனம்’

‘சாதி பிரிவினைகள்தான் இந்தியாவின் பலவீனம்’

திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் கமல்ஹாசன் உரை

சென்னை, ஆக. 17 -  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவனின் 63 ஆவது பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் ‘மதச் சார்பின்மை காப்போம்’ என்ற கருப்பொரு ளுடன் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் இந்நிகழ்வில் பேசுகையில், ‘திருமா வளவனின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்வு  சாதாரணமானதல்ல. சாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனம். சாதிய தடை கள் நீக்கப்பட்ட பின்புதான் நாம் ஒரே தேச மாக, ஒரே மக்களாக இணைய முடியும்” என்று தெரிவித்தார். “ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப் படுத்துவது எளிதல்ல. அப்படி செய்பவர்கள்  அனைவருமே அற்புதமான மனிதர்கள். என்  சாதியை சொல்லி என்னை கிண்டல் செய் வார்கள். சாதி தான் என் முதல் எதிரி” என்றும்  அவர் குறிப்பிட்டார். விழாவில் திருமாவளவனின் வாழ்க்கை வரலாறு குறித்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆவணப்படம் வெளியிடப்பட்டது.