tamilnadu

img

ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி மகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக!

மும்பை, ஜன.9- மகாராஷ்டிர மாநிலத்தில், சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. தேர்தல் நடைபெற்ற 6 மாவட்ட ஊராட்சிகளில் 5-ஐ பாஜக பறிகொடுத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் - காங்கி ரஸ் - சிவசேனா கூட்டணி கட்சிகளைக் கொண்ட ‘மகா விகாஸ் அகாதி’ கூட் டணி 4 இடங்களில் வெற்றி பெற்றுள் ளது. பாஜக வசமிருந்த, நாக்பூர், பால் கர், வாஷிம் ஆகிய 3 மாவட்ட ஊராட்சி களை ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி கைப்பற்றியுள்ளது.  பிரகாஷ் அம்பேத்கர் தலைமை யிலான வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி அகோலா மாவட்ட ஊராட்சியை வென் றுள்ளது. பாஜக-வுக்கு துலே மாவட்ட ஊராட்சி மட்டும் கிடைத்துள்ளது. இதனை காங்கிரசிடமிருந்து அக்கட்சி கைப் பற்றியுள்ளது. நந்துர்பார் மாவட்ட ஊரா ட்சியில், காங்கிரஸ் - பாஜக இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது. 6 மாவட்ட ஊராட்சிகளிலும் மொத்த மாக 332 வார்டுகள் உள்ளன. இவற்றில் பாஜக 103 வார்டுகளை கைப்பற்றி யுள்ளது. கூட்டணியாக போட்டியிட்ட காங்கிரஸ் (73), தேசியவாத காங்கி ரஸ் (46), சிவசேனா (36) ஆகிய கட்சிகள் மொத்தமாக 155 வார்டுகளில் வென் றுள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க விஷ யம், ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்திருக்கும் நாக்பூர் மாவட்டத்தி லேயே பாஜக படுதோல்வி அடைந்துள் ளது. இங்கு காங்கிரஸ் 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு 15 இடங்களும், தேசியவாத காங்கிர சுக்கு 11 மற்றும் சிவசேனாவுக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளன. அதேபோல, மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரியின் சொந்த ஊரான தபேவாடா-விலும் பாஜக வேட்பாளர் மாருதி சோம்குவார் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்.

;