tamilnadu

img

மகாராஷ்டிரா: 1078 பேருக்கு கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் 1078 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இது  அம்மாநில மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.  நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.  நேற்று ஒருநாளில் மட்டும் மராட்டியத்தில்  116 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், 1,018 ஆக உயர்ந்தது. 
இந்த நிலையில், மராட்டியத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம், மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,078 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக தொற்று உறுதியான 66 பேரில் 44 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவர். 


c