tamilnadu

img

மகாராஷ்டிராவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து - 5 பேர் பலி 

மகாராஷ்டிராவில் அதிகாலை பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை 
இழந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். 30 திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில் புதனன்று காலை பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். 30 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 
 
முதல்கட்ட விசாரணையில், அதிகாலை 3.15 மணியளவில் கொந்தைபரி காட்டுப்பகுதியில்  தனியார் பேருந்து ஒன்று மல்காபூரிலிருந்து குஜராத்தின் சூரத்திற்கும் சென்றுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்புகளின் மீது ஏறி 30 ஆதி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. காயமடைந்தவர்களை விசர்வாடியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.