தரங்கம்பாடி, ஆக.4- மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அருகேயுள்ள அப்பராசபுத்தூரில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. செவ்வாய்யன்று காலை வழக்கம்போல் ஊழி யர்கள் வந்து கடையை திறந்து பார்த்த போது, கடையின் பக்கவாட்டு சுவ ரை துளைத்து ஓட்டை போட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தனர். பின்னர் அங்கு மதுபா ட்டில் பாக்ஸ்கள் திருடு போயி ருந்தன. மதுபாட்டில்கள் கடையின் அருகில் சிதறியும் கிடந்தன. இதனை அறிந்த கடையின் சூப்ப ர்வைசர் அசோக்குமார், பொறை யார் காவல்நிலையத்தில் புகார் அளி த்ததன் பேரில், சீர்காழி டி.எஸ்பி யுவ ப்பிரியா, பொறையார் இன்ஸ்பெ க்டர் செல்வம், சப்இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை செய்து வரு கின்றனர். திருடு போன மதுபாட்டி ல்கள் சுமார் ரூ.70 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.