tamilnadu

தூய்மைப் பணியாளர் கை துண்டானதற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் முதல்வருக்கு விவசாயிகள் சங்க தலைவர் கடிதம்

திருத்துறைப்பூண்டி ஆக. 1- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தி வரும் சூழலில் நோய்த் தொற்று தீவிரமாக பரவாமல் தடுக்க காரணமாக இருப்பவர்கள் துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்களுமே. கடந்த ஜூலை 28 அன்று பாக்கியலட்சுமி நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பணி செய்யும்போது கை துண்டாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோன்று மார்ச் மாதம் நெல்லை மாநகராட்சி ராமையன்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்வதி என்பவர் அதிகாலை பணிக்கு செல்லும் பொழுது நான்கு சக்கர வாகனம் மோதி இரு கால்களையும் இழந்துள்ளார்.  இதற்கு அரசும் நிர்வாகமும் பொறுப்பேற்று அவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் அவர்களுடைய மருத்துவச் செலவு அனைத்தையும் தமிழக அரசும், நிர்வாகமும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளரும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய பெருந்தலைவருமான அ.பாஸ்கர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

;