districts

உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கடிதம்

சென்னை, பிப். 9- சத்தீஷ்கர், ராஜஸ்தான்  போன்று மாற்றுத்திறனாளி களுக்கு உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர்  அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது: மாற்றுத்திறனாளி களுக்கு சமவாய்ப்பு மற்றும்  அதிகாரங்கள் அளிப்பதன் மூலம் அவர்கள் முழுமை யான உரிமைகளை அடைய உரிய நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 வலியுறுத்து கிறது. ஒன்றிய  அரசு பரிந்துரை நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க மாநில அரசுகள் கொள்கை முடிவெடுக்க 2019இல் ஒன்றிய ஊனமுற்றோர் நலத்துறை பரிந்துரை செய்துள்ளது. சத்தீஷ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் மாற்றுத்திறனாளி உறுப்பி னரை தேர்வு செய்யாத அனைத்து ஊராட்சிகளிலும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என 2 மாற்றுத்திறனாளி உறுப்பினர்களை நியமித் திட 2019இல் அம்மாநில பஞ் சாயத்துராஜ் சட்டத்தில்  திருத்தம் செய்யப்பட் டுள்ளது. ராஜஸ்தான் மாநில மாநகராட்சி, நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் அளிக்க அந்த மாநில நகராட்சி நிர்வாக திருத்த சட்டம் 2021ஐ நிறைவேற்றி, அமலுக்கு வந்துள்ளது.

 ஊராட்சிகளில் பிரதிநிதித்து வம் அளிக்க அம்மாநில மாற்றுத்திறனாளி ஆணைய நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ள செய்தியும் உள்ளது. 2019இல் அதிமுக ஆட்சியின்போது இந்த கோரிக்கை சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் கண்டுகொள்ள விலை. 2021 சட்டமன்ற தேர் தலை முன்னிட்டு சங்கம்  முன்வைத்த கோரிக்கை சாசனத்திலும் இந்த  கோரிக்கை வலியுறுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது. சமூக நீதியில் முன்னோடி மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பது சமூக நீதியாகப் பார்க்கப்பட வேண்டும். சமூகநீதிக் கோட் பாட்டில் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். நகர்ப்புற உள் ளாட்சிகளில் தொழு நோயாளிகள் போட்டியிட வும்; கூட்டுறவு தேர்தல்க ளில் பார்வை மாற்றுத்திறனா ளிகள் போட்டியிடவும் இருந்த தடைகளை சமீ பத்தில் சட்டமன்றத்தில் உரிய  திருத்தங்கள் மேற்கொண்டு நீக்கியது முன்னுதாரண மானது, பாராட்டுக்குரியது. தமிழகத்திலும் ராஜஸ் தான், சத்தீஷ்கர் மாநிலங் களைப் போன்று தமிழகத்திலும் நகர்ப்புற, ஊர உள்ளாட்சி அமைப்பு களில் மாற்றுத்திறனாளிக ளுக்கு நியமன பிரதிநிதித்து வம் அளிக்கும் வகையில் உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.