புதுக்கோட்டை, ஏப்.30 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான்பட்டி கிராமத்தில் உள்ள ஆதிக்கச் சுவற்றை அகற்ற வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலி யுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம் தமிழக முதல்வ ருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித் திருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாக மாஞ்சன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பாப்பான்பட்டி. இக்கிரா மத்தில் வசிக்கும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த வர் வி.வடிவேல். வடிவேல் மற்றும் 3 பேர் தலா 9 செண்ட் இடத்தில் (சர்வே எண் 267\2ஏ) கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டு கள் வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மேற்படி குடும்பத்தினர் அனைவரும் சுமூக மாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டு களாக தனது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளதாக தியாகராஜன் என்பவர் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், வடி வேல் வீட்டின் பகுதிகளையும் உள்ளடக்கி 16.10.2020 அன்று சுவர் எழுப்பியுள்ளார். இதனை தடுக்க வடிவேல் எவ்வளவோ முயன்றும் பலனில்லை. சுவற்றை அகற்ற அதிகாரிகளை சந்தித்து பலமுறை முறை யிட்டும் இதுவரை சுவர் அகற்றப்படவில்லை. கோட்டாட்சியரிடம் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கு முடியும் வரை சுவர் எழுப்பக்கூடாது என அதிகாரிகள் வலியுறுத்தியும் இந்தச் சுவர் எழுப்பப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட வடிவேல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆக்கிரமித்து சுவர் எழுப்பியவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
காலங் காலமாக இருந்துவரும் சாதிய படிநிலை, மேலாதிக்க மனநிலையின் அடிப்படையிலேயே இந்த சுவர் எழுப்பப்பட்டுள்ளதாக கருத வேண்டி யுள்ளது. அதனாலே இதை ஆதிக்கச் சுவராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருதுகிறது. இந்நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலத் தலைவர் த.செல்லக் கண்ணு தலைமையில் மே 2 ஆம் தேதி, மேற்படி ஆதிக்கச் சுவற்றை அகற்றும் போராட்டம் நடத்துவதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திட்டமிட்டுள்ளோம். எனவே, போராட்டம் தேவையில்லாத அள விற்கு குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக அரசே மேற்படி ஆதிக்கச் சுவற்றை அகற்ற நடவ டிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். இதன் மூலம் அப்பகுதியில் சமூக நல்லிணக்கத்தை கட்டிக் காக்க முடியும் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.