tamilnadu

img

மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத் முடிவு

வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் நிதியுதவி

போபால், ஜன. 31 - கமல்நாத் தலைமையில் மத்தியப்பிரதேசத் தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், ஜனவரி 31, 2019-இல் துவங்கப்பட்ட திட்டம்தான் ‘யுவ ஸ்வபிமான் யோஜனா’ ஆகும். இதன்மூலம் 100 நாட்கள் உத்தரவாத வேலையும், வேலையற்ற இளைஞர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், ‘யுவ ஸ்வபிமான் யோஜனா’ திட்டத்தின் மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கான மாத நிதியுதவியை ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரமாக உயர்த்தவும், ஊரக வேலையுறுதித் திட்ட நாட்களை 365 ஆக அதிகரிக்கவும் கமல்நாத் அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஓராண்டாக ‘யுவ ஸ்வபிமான் யோஜனா’வின் செயல்பாடு களை ஆய்வு செய்து இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்தியப்பிரதேச மாநில மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பி.சி. சர்மா தெரிவித்துள்ளார்.  மேலும், இந்த  திட்டத்திற்காக மாநில பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.   இதன் நோக்கம் ரூ. 200 கோடி செலவில் 25 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே ஆகும். பதிவு செய்து காத்திரு க்கும் வேலையற்ற இளைஞர்களை தேர்வுசெய்து தகுதியின் அடிப் படையில் தற்காலிக வேலை வழங்க நகர்ப்புற மேம்பாட்டுத்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

;