tamilnadu

img

குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியதே

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் ரவிச்சந்திரன் பேட்டி 

சென்னை,மார்ச் 6- குழந்தைகளுக்கு வரக்கூடிய புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்  கூடியதே என்று சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் சி.ஆர்.ரவிச்சந்திரன் கூறினார். இம் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயால்  பாதிக்கப்பட குழந்தைகள் 200  பேருக்கு  நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ்  ஆய்வகம் சார்பில் போர்வைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் முதன்மை இயக்க அலுவலர் ஐஸ்வர்யா வாசுதேவன்,  தலைமை நுண்ணுயிரியல் வல்லு னர் டாக்டர் சரண்யா நாராயண், குழந்  தைகள் நல மருத்துவமனை இயக்கு நர் டாக்டர் ரேமா சந்திரமோகன்  உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வயதானவர்களுக்கு வரும் புற்று நோயை ஒரளவுக்குத்தான் கட்டுப்ப டுத்தமுடியும். நோயாளி சில ஆண்டு கள்வரை உயிர் வாழ வைக்கமுடியும். ஆனால் குழந்தைகளுக்கு வரும்  புற்றுநோயை சிகிச்சை மற்றும் மருந்து கள் மூலமாக குணப்படுத்த முடியும்.  குழந்தைகளை பொறுத்தவரை அவர்களுக்கு மூக்கில் ரத்தம் வழிந்தால் அல்லது வயிற்றில் வீக்கம்  காணப்பட்டால் அல்லது தொடர்ந்து காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டால் உடனே மருத்து வரை அணுகவேண்டும். அது எத னால் வந்தது என்பதை கண்டறிந்து சிகிச்சசை அளிக்கவேண்டும். சில நேரங்களில் புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கக்கூடும். பெற்றோர் அசட்டையாக இருந்து விடக்கூடாது என்றார் அவர்.புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு தமிழ்நாட்டிலேயே சிகிச்சை  அளிக்கக்கூடிய ஒரே அரசு மருத்து வமனை எழும்பூர் குழந்தைகள் நல  மருத்துவமனைதான். ஒரு மாதம்  தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதால் குழந்தைகளுடன் வரும் பெற்றோர் தங்க தொண்டு நிறுவனங்கள் மூல மாக ஏற்பாடு செய்யப்படுகிறது. யூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனம்  தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்  பட்ட குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.