பெரம்பலூர், ஜூலை 20- நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பெரம்பலூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யான சின்னமுட்லு நீர்த் தேக்கம், அரசு மருத்துவக் கல்லூரி, ஜவுளி பூங்கா தொடர்பாக எந்த அறி விப்பும் வராததால் தொகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப் பந்தட்டை வட்டம் மளையாளப் பட்டி கல்லாற்றின் குறுக்கே சின்ன முட்லு நீர்த் தேக்கம் அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்க ளின் நீண்ட நாள் கோரிக்கையில் முக்கியமானது. மழைக் காலத்தில் வரக் கூடிய கல்லாற்று நீர் அரும்பா வூர் தொழுதூர் கருவேப்பிலை குறிச்சி வழியாக கடலூர் அருகே கட லில் கலந்து வீணாகிறது. அப்படி வீணாகும் நீரை தேக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தான் சின்னமுட்லு நீர்த்தேக்கம். இத்திட்டப் பணிகளுக்கு நில அளவை செய்து பல்வேறு கட்டங்க ளாக 35 கோடி ரூபாய் ஒதுக்கி கல் நடும் பணி மட்டுமே நடைபெற்றது. இத்திட்டம் நிறைவேறுவதற்கு தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதே போல 2013-ல் சட்டமன்றத் தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் பெரம்பலூர் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப் படும் என்று வாக்குறுதி அளித்தார். அப்போதே மருத்துவக் கல்லூரி அமைப்பதற்குரிய நிலம் கையகப் படுத்தப்பட்டு தற்போது வரை அத்திட்டம் கிடப்பில் உள்ளது. அம்மாவின் அரசு என்று கூறி ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி அரசு இந்த சட்டமன்ற கூட்டத்திலாவது அறி விப்பார்கள் என்ற தொகுதி மக்க ளின் எதிர்பார்ப்பு பொய்யாகிவிட்டது. அதே போல் மாவட்டத்தில் பருத்தி விவசாயம் கூடுதலாக நடை பெற்று வருவதால் பருத்தியை உற் பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாடாலூர் அருகே 150 ஏக்கர் நிலம் மட்டும் தேர்வு செய்யப்பட்டு திட்டம் நிறை வேற்றப்படாமல் கேள்விக்குறி யாக உள்ளது. மேற்படி திட்டங்கள் குறித்தும் நடந்து முடிந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில் எந்த அறி விப்பும் இல்லாததால் தொகுதி மக் கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இத்திட்டங்களை நிறைவேற்றி தருவதாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து விட்டு நிறை வேற்றாததால் தொகுதி மக்க ளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் நடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றி ருக்கும் நிலையில் இத்திட்டத்திற் கான எந்த அறிவிப்பும் இல்லாதது ஆளும் கட்சியின் மீது தொகுதியில் கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. எனவே மேற்கண்ட திட்டங்க ளுக்கு தேவையான நிதி ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்ற வேண் டும் என தொகுதி மக்கள் எதிர் பார்க்கின்றனர் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.செல்லதுரை வலியுறுத்தி உள்ளார்.