tamilnadu

img

ஒரு தலித் எம்.பி.யைக் கூட பாஜக மத்திய அமைச்சராக்கவில்லை: சித்தராமையா

பெங்களூரு:
கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு தலித் எம்.பி.யைக் கூட பாஜக மத்திய அமைச்சராக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்ததலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா குற்றம்சாட்டினார். 

இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், “வெறும் பேச்சுக்களால் மட்டும் தலித் சமுதாய எழுச்சி ஏற்பட்டுவிடாது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனித் தொகுதிகளில் இருந்து பல பாஜக உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கெல்லாம் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு தலித் எம்.பி.யைக் கூட பாஜக மத்திய அமைச்சராக்க முன்வரவில்லை. இதைவிட தலித்களுக்கு துரோகம் இழைக்க முடியுமா” என்று   விமர்சித்துள்ளார். 
 

;