புதுதில்லி:
இந்தியா - இலங்கை இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில், வரி ஏய்ப்பை தடுக்கும்நோக்கத்தில் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்யவும் மேலும் 3 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு 2,500 கோடி ரூபாயை மூலதனமாக வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோர் உரிய வரியை செலுத்தி, வட்டி மற்றும் அபராத தள்ளுபடி சலுகை பெறும் திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த மசோதாவில் திருத்தம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.கடன் வசூல் தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகளுக்கும் பொருந்தும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.