tamilnadu

img

உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் தில்லியில் திறப்பு

புதுதில்லி,ஜூலை 5- 20 கால்பந்து மைதான அளவுடைய தில்லி சத்தர்பூர் பகுதியில் மாநில அரசு 10 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொரோனா வைரஸ் சிகிச்சை மையம் ஒன்றை அமைத்துள்ளது. 1,700 அடி நீளம் 700 அடி அகலம் கொண்ட இந்த சிகிச்சை மையம் மத்திய உள்துறை அமைச்சத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சிகிச்சை மையம் தற்போது உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையமாக கரு தப்படும் நிலையில், தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஞாயிறன்று திறந்து வைத்தார். சர்தார் படேல் பெயரில் அமைக்கப் பட்ட இந்த கொரோனா சிகிச்சை  மையத்தில் மிதமான மற்றும் அறி குறிகள் அற்ற கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படு வார்கள். 200 அறைகளாகப் பிரிக்கப் பட்டு அறைக்கு 50 படுக்கைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், முத லில் 1000 நோயாளிகள் அனுமதிக்கப் படுகின்றனர்.

;