tamilnadu

img

மாற்றுத் திறனாளிகள் உலக தினம் இன்று.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் எண்ணற்ற பல்வேறு வகை மாற்றுத்திறனாளி களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலகதினவாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. டிசம்பர் 3 உலக தினம் என்பது,வார்த்தைகளையும், உத்தரவாதங்களை யும் கொண்ட சம்பிரதாயமான ஒன்றாககருதி இருந்துவிடாமல் இந்த இலக்குகளை மாற்றுத்திறனாளிகள் அடைய,  அனைத்து தரப்பினரும் ஆதரவும் வாய்ப்பும் நல்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ),  “இந்தியாவில் கல்வி நிலைமை-2019“ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு மாநில அரசுகள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பில் இருந்து தவறியுள்ளது என பதிவு செய்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட சில பணிகள் முன்னுரிமையில் வழங்க வேண்டும்; 4 மணி நேர பணிக்குமுழு ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற விதிகள் அமலாகவில்லை.ஊனமுற்றோர் துறைக்கான மானிய கோரிக்கையில் நாட்டின் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கு வெறும் 134 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி களுடைய மாத உதவித்தொகைக்காக மத்திய அரசின் பங்கு வெறும் ரூ.300 என்பதாகவே நீடிக்கிறது. நாடு முழுவதும் மாற்றுத்திறன் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

தமிழகத்திலும், ஆளும் அதிமுக அரசு, மாற்றுத்திறனாளிகளின் நலன்களை சட்ட உரிமைகளின் அடிப்படையில் அணுக தொடர்ந்து மறுத்து வருவதை காண முடிகிறது.  ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016ஐ உளப்பூர்வமாக அமல்படுத்த மறுக்கிறது. நாடு தழுவிய அளவிலும் தமிழகத்திலும் இருக்கிற சட்டஉரிமைகளையாவது நிறைவேற்றுங்கள் என மாற்றுத் திறனாளிகளின் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.  மாற்றுத்திறனாளிகளின் இத்தகைய அனைத்து உரிமை சார்ந்த போராட்டங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறு துணையாக விளங்கும் என்பதை இந்த உலக தினத்தில் உறுதியுடன் தெரி விக்கிறோம். வாழ்த்துகிறோம்.

;