திருவண்ணாமலை, அக்.13- திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும், உலக திரைப்பட விழா வரும் புதன் கிழமை (அக்.16) முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. புதன் கிழமை காலை 11 மணிக்கு, கும்பளாங்கி னைட்ஸ் என்ற மலையாள படத்துடன் விழா தொடங்குகிறது. மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி திரைப்பட விழாவை தொடங்கி வைக்கிறார். உலகத் திரைப்பட விழா நடைபெறும் ஐந்து நாட்களி லும், திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், கவிஞர், ஒளிப்பதிவாளர், மற்றும் திரைப்பட வசனகர்த்தா ஆகியோர்களுடன், சந்திப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.