tamilnadu

img

மஞ்சக்கண்டியில் காவல்துறையுடன் மோதல் : 4 மாவோயிஸ்ட்டுகள் பலி

பாலக்காடு:
கேரள மாநிலம் அட்டப்பாடி அருகில் உள்ள மஞ்சக்கண்டி வனத்தில் தண்டர்போல்ட் காவல்துறையினருடன் நடந்த மோதலில் ஒரு பெண் உட்பட நான்கு மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.மஞ்சக்கண்டி வனப்பகுதியில் 7 மாவோயிஸ்ட்டுகள் நடமாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மஞ்சக்கண்டி வனப்பகுதியில் உள்ள புதூர் ஊராட்சி மேல் மஞ்சுக்கண்டி கிராமத்தின் அருகில் இவர்கள் பதுங்கியிருப்பதுதெரியவந்தது. அதைத் தொடர்ந்து திங்களன்று பகல் 12 மணியளவில் அப்பகுதிக்குசென்றபோது தண்டர்போல்ட் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கு மிடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திக், சுரேஷ், ஸ்ரீதேவி ஆகியோர் கொல்லப்பட்டனர். காவல்துறையினரின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில் செவ்வாயன்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. அதில் பவானிதளம் குழுவின் தலைவர் மணிவாசகம் கொல்லப்பட்டார். இந்த குழுவின் தலைவராக இருந்த தேவராஜின் மரணத்துக்கு பிறகுமணிவாசகம் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். தப்பி ஓடிய மற்ற 3 மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணிக்கவாசகம் மீது தமிழக காவல்துறையினர் தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கடந்த மாதம் வயநாட்டில் மாவோயிஸ்ட்டுகள் ஒரு கூட்டம் நடத்தியதாகவும் அதில் மணிவாசகம் என்கிற அப்பு தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 22ஆம் தேதி மஞ்சிகட்டிக்கு சென்றுள்ளனர். முன்னதாக 19ஆம் தேதிஅவர்கள் உதகையில் உள்ள முள்ளியிலிருந்து கேரள வனப்பகுதிக்கு வந்ததாகவும். அவ்வப்போது அட்டப்பாடிக்கு வந்து சென்றதாகவும்  காவல்துறையினர் தெரிவித்தனர்.