tamilnadu

img

கொரோனா பாதிப்பில் ரயில்வேயின் பங்களிப்பு என்ன?

புதுதில்லி:
ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் மருந்துகள், மாஸ்க்குகள், மருத்துவமனை பொருட்கள் என 1,150 டன் மருத்துவப் பொருட்களை கொண்டு சென்றுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அத்தியாவசிய போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் தவிர அனைத்துப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு மருத்துவப் பொருட்களை ரயில் மூலமாக கொண்டு சென்று விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் ஊரடங்கு காலத்தில் இந்தியா முழுவதும் 18-4-2020 வரை 1,150.17 டன் மருத்துவப் பொருட்களை ரயில்வே நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளது.

இந்தியாவிலுள்ள 17 ரயில்வே மண்டங்களில் அதிகபட்சமாக வடக்கு ரயில்வே சுமார் 399.71 டன் பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளது. அதனை தொடர்ந்து மேற்கு ரயில்வே 328.84 டன் மற்றும் மத்திய ரயில்வே 135.64 டன் பொருட்களை கொண்டுசென்றுள்ளது. தென்னக ரயில்வே 83.13 டன் பொருட்களை கொணடு சென்றுள்ளது. மிகக்குறைந்தளவாக கிழக்கு கடற்கரை ரயில்வே 1,06 டன் பொருட்களை கொண்டு சென்றுள்ளது.
சமீபத்தில் ஆட்டிசம் பாதித்த சிறுவனுக்காக ஆஜ்மீரில் இருந்து மும்பைக்கு சரக்கு ரயில் மூலம் 30 லிட்டர் ஒட்டகப்பாலை ரயில்வே கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.    
 

;