tamilnadu

img

மேம்பாலத்தில் எந்த ‘நாமம்’ போடுவது? திருப்பதியில் மீண்டும் வடகலை - தென்கலை சர்ச்சை

திருப்பதி:
திருப்பதியில் கட்டப்பட்டு வரும் ‘கருடா’ மேம்பாலத்தில் தாங்கள் விரும்பும் நாமத் தையே பதிக்க வேண்டும் எனக் கோரி வடகலை மற்றும் தென்கலை வைணவர்கள் இடையே மோதல் மூண்டுள்ளது.திருப்பதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ், நந்தி சந்திப்பு அருகே ஆறு கிலோமீட்டர் நீளத்திற்கு 684 கோடி ரூபாய் செலவில்‘கருடா மேம்பாலம்’ கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த மேம்பாலத்தின் தூண்களில், ஒய் (Y) வடிவிலான தென்கலை நாமம் வரையப்பட்டதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யு (U) வடிவிலேயே நாமம் போட வேண்டும் என்று கூறியுள்ளனர்.போக்குவரத்து பிரச்சனையைச் சமாளிப்பதற்காக அமைக்கப்பட்ட பாலத்தில், எந்த நாமம் போடுவது என்பதே ஒரு பிரச்சனையாகி உள்ளது. மாநகராட்சி ஆணையாளர் கிரிஷாவோ, “பாலத்தில் நாமம் போடுவதா வேண்டாமா, அவ்வாறு போட்டால் எந்தவடிவில் போடுவது என்பதை திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து கொள்ளவேண்டியதுதான்” என ஒதுங்கிக் கொண்டுள்ளார்.இதையடுத்து கட்டுமான நிறுவனமானது, ஆங்கிலேயர் காலத்தில் கூறப்பட்ட தீர்வுப்படி தென்கலை வடகலை இரண்டிற் கும் பொதுவாக, ‘ப’’ வடிவ நாமத்தைப் போட்டுத் தப்பித்துள்ளனர்.

;