tamilnadu

img

முஸ்லிம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம்...

ஜெய்ப்பூர்:
மருத்துவர்கள் தாங்கள் சிகிச்சை அளிக்கும் நோயாளிகளிடம் பாகுபாடு பார்ப்பது, மருத்துவ அறமாக இருக்காது. அனைவரையும் நோயாளிகள்என்றே பார்க்க வேண்டும். பெரும் பாலான மருத்துவர்களும் அப்படித்தான் இதுவரை இருந்து வருகின்றனர்.
ஆனால், மருத்துவத்தை பணம் காய்க்கும் மரமாகப் பார்க்கும் முதலாளித்துவ சிந்தனையானது, அந்த அறத்தைஅழித்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறத்தில் நோயாளிகளை மத அடிப்படையில் பேதம்பிரிப்பவர்களும் மருத்துவத் துறைக்குள் நுழைந்து விட்டனர்.

முஸ்லிம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஊழியர்கள் வாட்ஸ்-ஆப்பில் நடத்திய உரையாடல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் சர்தார்ஷாஹர் மாவட்டத்தின் சுரு நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவமனை ஊழியர்கள் வாட்ஸ்-அப் குழுவில் உரையாடல் களை (சாட்டிங்) நடத்தியுள்ளனர்.அப்போதுதான் “முஸ்லிம் நோயாளிகள் வந்தால் அவர் களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது. அவர்களை முஸ்லிம்மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்” என்று சாட்டிங்-கில் கூறியுள்ளனர்.இதுதொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும்,இந்த சாட்டிங் தொடர்பான புகார்கள் அடிப்படையில் சுருநகர போலீசார் விசாரணையிலும் இறங்கியுள்ளனர்.இதனிடையே உரையாடல்நடத்திய ஊழியர்கள் பணியாற்றும் தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் சுனில் சவுத்ரி, நடந்த சம்பவத்திற்காக சமூக வலைத்தளத்தில்மன்னிப்பு கேட்டுள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்“மருத்துவமனை ஊழியர் களின் சாட்டிங் விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள் கிறேன். எனக்கோ அல்லது எனது மருத்துவமனை ஊழியர்களுக்கோ எந்தவொரு சமூகத்தையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை. அனைவருக்கும் நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம்; முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் சிகிச்சை அளித்த ஆவணங்களும் எங்களிடம் உள் ளன” என்று சுனில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.