1 ) அன்று ஹிட்லர் மான்களுக்கு உணவு; இன்று மோடி மயிலுக்கு உணவு. வேறு ஏதாவது உங்களுக்கு தோன்றினால் கம்பெனி பொறுப்பு அல்ல!
2 ) பத்திரிகையாளர் ரமாலட்சுமி:
3 ஆண்டுகளுக்கு முன்பு லாலு பிரசாத் யாதவின் வீட்டுக்கு இரன்டு மயில்கள் கொண்டுவந்த பொழுது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. கூப்பாடு போட்டது. இப்பொழுது? பொருளாதாரம் படுகுழியில்! கோவிட் மரணங்கள் ஏறுமுகத்தில்! ரோம் மன்னர்கள் மக்களின் துன்பங்களை கண்டு எள்ளி நகையாடுவது போல உள்ளது.
மயில்களின் உரையாடல்:
அவர் எனக்கு உணவு அளித்த பொழுது சூழலியல் குறித்து பேசலாம் என திட்டமிட்டேன். ஆனால் நமது தேசிய பறவை எனும் சிறப்பை இழந்துவிடவும் நான் விரும்பவில்லை.
மதுக்கூர் இராமலிங்கம்
மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூசனுக்கு தரப்படும் அவகாசத்திற்கும் எஸ்.வி.சேகருக்கு தரப்படும் அவகாசத்திற்கும் வேறுபாடு உண்டு அதிமுகவினர் கட்சிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் - ஒபிஎஸ். எந்த கட்சிக்கு?
அருணன்
பாதிக்கப்பட்ட இனத்திற்காக, மதத்திற்காக, சாதிக்காக அந்தந்த இனத்தவர், மதத்தவர், சாதியினர் மட்டுமே போராடணும். இது இனவாத, மதவாத, சாதிவாத அரசியல் அன்றோ? இப்படி பொசுக்குன்னு கேட்டிடக் கூடாதுன்னுதான் பின்நவீனத்துவமுன்னு உலகளாவிய பேரு வச்சிருக்கோம்!
“கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சி தடைபட்டு நின்றுவிட்டது”: கர்நாடகா ரிட்டர்ன்டு பாஜககாரர். இதில் 15 ஆண்டுகள் அதிமுக ஆண்டது. அப்ப, அதன் ஆட்சிதான் மோசம்கிறாரு!
3. ) கிரேட்டா தன்பர்க்/ சூழலியல் செயற்பாட்டாளர்:
இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று காலத்திலும் வெள்ளத்தால் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலிலும் மாணவர்களை தேசிய தேர்வுகள் எழுதுமாறு நிர்பந்திப்பது துளியும் நியாயமற்றது. நீட்/ ஜே.இ.இ. தேர்வுகள் தள்ளி வைக்கப்பட வேண்டும் என கோருவோருடன் நானும் இணைகிறேன்.
4 ) பிரியங்கா சதுர்வேதி/ சிவசேனை மாநிலங்களவை உறுப்பினர்:
பயமின்றி உண்மைகளை பேசும் பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்/ அவதூறு/ வாயடைப்பு/ கொலை! எவரெல்லாம் ஜனநாயகத்தின் 4வது தூணை சரணாகதி செய்தனரோ அவர்கள் எல்லாம் தொலைகாட்சிகளில் தினமும் கூச்சல் போட்டுக் கொண்டுள்ளனர். பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா ஏன் 142/180வது இடத்தில் உள்ளது என்பதை சிந்தியுங்கள்.
5 ) உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வர்
மத்திய அரசாங்கம் நமது குரலை நசுக்க முயல்வதால் எதிர்கட்சிகளை சார்ந்த முதல்வர்கள் தமது குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும். எந்த அரசியல் கருத்துக்களை கொண்டவர்களாக இருந்தாலும் அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் முதல்வர்களும் மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் தேசத்தின் வளங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரம் இது.
6 ) சமூக செயற்பாட்டாளர் அத்வைத்:
உ.பி.யில் கடந்த 10 நாட்களில் இரண்டாவது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். இது டிவிட்டரில் டிரெண்டிங் ஆகாது; கோபக்குரல்கள் எழாது; தொலைகாட்சிகளில் விவாதம் நடக்காது. இந்தியாவின் தலைசிறந்த முதல்வராக யோகி ஆதித்யநாத் மீண்டும் அறிவிக்கப்படுவார்.
7 ) தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர்
கேரள சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி அடைந்ததில் பா.ஜ.க.வும் காங்கிரஸ் கூட்டணியும் விரக்தியின் விளிம்பில்! அதனால்தான் தலைமை செயலகத்தில் நடந்த சிறு தீ விபத்தை முன்வைத்து கோவிட் வழிகாட்டுதல்களை உதறிதள்ளிவிட்டு போராட்டம் நடத்துகின்றனர். தங்க கடத்தல் கோப்புகள் அழிக்கப்பட்டன என குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் தலைமை செயலகத்தின் அனைத்து கோப்புகளும் ஒன்றுவிடாமல் டிஜிட்டல் வடிவத்தில்தான் உள்ளன.
சமூக ஊடகங்களில் உலா வரும் நகைச்சுவை:
கேரள தலைமை செயலக தீ விபத்து காரணமாக ஜிமெயில் எரிந்துவிட்டது; யாஹூ படுகாயம் அடைந்துவிட்டது. எனவேதான் காங்கிரஸ் கூட்டணி போராட்டம். இந்த நகைச்சுவை ஒரு புறமிருக்க; ஒரு பா.ஜ.க. பத்திரிகையாளர் ஒருவர், செய்தியாளர் சந்திப்பில் சீரியசாக கேட்கிறார்: “தீ விபத்தில் எவ்வளவு டிஜிட்டல் கோப்புகள் எரிந்தன?”
8 ) பினராயி விஜயன், கேரள முதல்வர்
ஆகஸ்ட் 28, 2020 அய்யன்காளி அவர்களின் பிறந்த தினம். இன்று நாம் உரிமை கோரும் அனைத்து பொது விழுமியங்களும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் விளைவாகவே பெறப்பட்டவை என்பதை நினைவுபடுத்தும் தினம். தெருக்கள் அனைவருக்கும் உரிமை படைத்தவை என்பதை அய்யன்காளி மீட்டெடுத்தார். நமது மாநிலத்தின் நிலபிரபுத்துவத்துக்கு எதிரான போரில் அது மகத்தான அத்தியாயங்களில் ஒன்று.
9 ) மார்க்சிஸ்ட் கட்சி, புதுச்சேரி
44 ஆண்டுகளுக்கு முன்பு புரட்சி கவிஞர் விடுதலை போராட்ட வீரர் காஜி நஸ்ருல் இஸ்லாம் மறைந்தார். பாட்டாளி வர்க்க சர்வதேச கீதத்தை மொழிபெயர்த்தவர்; தனது கவிதைகளில் கம்யூனிசத்தை பரப்பியவர். விவசாய தொழிலாளர் கட்சியின் அமைப்பாளர். அவரின் கவிதை: “இந்து சகோதரனே வா! இஸ்லாமிய சகோதரனே வா! கிருத்துவ சகோதரனே வா! பவுத்த சகோதரனே வா! அனைத்து தடைகளையும் தாண்டுவோம்; அற்ப வேறுபாடுகளையும் சுயநலத்தையும் தூக்கி எறிவோம். சகோதரர்களை சகோதரர்கள் என்றே அழைப்போம்!’’
பாஜக அன்றும் இன்றும் - அ.முத்துக்கிருஷ்ணன்
கமலா ஹாரிஸ் ஒரு பெருமைமிகு இந்தியர் ஆனால் ராகுல் காந்தி ஒரு இத்தாலியர். மன்மோகன் சிங்கை நாங்கள் கேவலப்படுத்துவோம் ஆனால் நீங்கள் மோடியை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ன கேவலம் இது, சோனியா ஒரு வெயிட்டர்.. மோடி டீவிற்றவர் என்பது எத்தனை பெருமிதம் தெரியுமா! சானியா மிர்சா ஒரு பாகிஸ்தானியரை மணந்தார், அவர் பாகிஸ்தானின் மருமகள், சோனியா இந்தியரை மணந்தார், அவர் ஒரு இத்தாலியின் மருமகள்!
2014க்கு முன் ஊழல், ஊழல் ஊழல்,
2014க்கு பின் ஊழல் பற்றி கப் சிப், மயான அமைதி!
2014க்கு முன் மோடிக்கு நூறு நாட்கள் கொடுங்கள்
2014க்கு பின் மோடிக்கு 20 வருடங்கள் கொடுங்கள்!
2014க்கு முன்- அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை
2014க்கு பின்- PMCARES நிதியை CAG தணிக்கை செய்ய வேண்டியதில்லை.
சகாரா, பிர்லா, எடியூரப்பா ஊழல் வழக்குகளில் டைரி குறிப்புகளை, வங்கி பாஸ்புக்குகளை சாட்சியங்களாக ஏற்க முடியாது. சுசாந்த் சிங் வழக்கு, அகஸ்டா வெஸ்ட்லான்ட் வழக்கில் டைரி குறிப்புகளை, வங்கி பாஸ்புக்குகளை சாட்சியங்களாக ஏற்கலாம்.
முன்பு - உச்ச நீதிமன்றம் இந்துக்களுக்கு எதிரானது, சபரிமலை தீர்ப்பை ஏற்க மாட்டோம், நீதிமன்றங்கள் மத விவகாரங்களில் தலையிடக் கூடாது. இப்பொழுது- ராமர் கோவில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வழிகாட்டுதலின் படி கட்டப்படுகிறது, அதை எதிர்த்து பேசுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதப்படும், நீதித்துறையை மாண்புடன் நடத்துங்கள்.